2019 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.21 ஆயிரம் மதிப்பிலான வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான தகவலின்படி 128 வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | கேப்டன் பதவியிலிருந்து விலக தோனி எப்போது முடிவெடுத்தார்?
மொத்தம் ரூ.21,074.43 கோடி மதிப்பிலான வங்கி மோசடிகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மேற்கு வங்கத்தில் ரூ.293.64 கோடி மதிப்பிலான 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் 157.26 கோடி மதிப்பிலான 8 வழக்குகளும், ராஜஸ்தானில் ரூ.12.06 மதிப்பிலான 1 வழக்கும், மகாராஷ்டிரத்தில் 20312.35 மதிப்பிலான 101 வழக்குகளும், பஞ்சாபில் 298.94 கோடி மதிப்பிலான 12 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தனது எழுத்துப்பூர்வ பதிலில் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருண்ராஜா காமராஜ் படம் கைவிடப்பட்டது ஏன்? விஷ்ணு விஷால் விளக்கம்!

இரவு 10 மணி வரை சென்னை, 17 மாவட்டங்களில் மழை!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!

இன்ஸ்டாகிராமில் 18+ ரீல்ஸ்களை நீக்குவது எப்படி?
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



