கேப்டன் பதவியிலிருந்து விலக தோனி எப்போது முடிவெடுத்தார்?

கேப்டன் பதவியிலிருந்து விலக தோனி முடிவெடுத்தது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.
கேப்டன் பதவியிலிருந்து விலக தோனி எப்போது முடிவெடுத்தார்?

கேப்டன் பதவியிலிருந்து விலக தோனி முடிவெடுத்தது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதவுள்ளன.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். இதையடுத்து புதிய கேப்டனுடன் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

தோனியின் இந்த முடிவு பற்றி அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தற்போது ஜடேஜா அபாரமாக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு அவர் தலைமை தாங்க இதுவே சரியான நேரம் என்றார் தோனி.  இன்று காலை பயிற்சிக்குச் செல்லும் முன்பு அணி வீரர்களுடனான கூட்டத்தில் தன் முடிவைத் தெரிவித்தார் தோனி. இதைப் பற்றி அவர் யோசித்து வந்துள்ளார். அணிக்கு எது நல்லதாக இருக்கும் என எண்ணுவாரோ அதையே தோனி செய்வார். ஜடேஜா கேப்டனாவது குறித்த பேச்சு வருவது முதல்முறையல்ல. கடந்த வருடம் இதுகுறித்த பேச்சு நடைபெற்றது. தோனிக்கு அடுத்து சிஎஸ்கே கேப்டனாக ஜடேஜாவே பொருத்தமான நபர் என்பது எங்களுக்குத் தெரியும். விராட் கோலியை எப்படி இந்திய அணி கேப்டன் பதவிக்கு தோனி தயார் செய்தாரோ அதேபோல தான் ஜடேஜாவையும் இதற்கு ஏற்றாற்போல உருவாக்கினார். ஜடேஜாவுக்கு தோனியின் வழிகாட்டுதல் எப்போதும் இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com