
பாரதிய ஜனதாவை சேர்ந்த அனைத்து மக்களவை உறுப்பினர்களும் இன்று மக்களவைக்கு வர அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி தொடங்கி இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்றைய மக்களவை கூட்டத்திற்கு பாஜகவை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் வர வேண்டும் என்று பாஜக மக்களவை கொறடா உத்தரவிட்டுள்ளார்.
தில்லி மாநகராட்சி திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த இரண்டு நாள்களாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.