‘வேண்டுமென்றால் என்னை சிறையில் அடையுங்கள்’: பாஜகவை சாடிய உத்தவ் தாக்கரே

அதிகாரத்தை அடைவதற்காக எங்களது குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜகவை விமர்சித்தார்.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதிகாரத்தை அடைவதற்காக எங்களது குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள் என மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜகவை விமர்சித்தார்.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, “ அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக எங்களது குடும்பத்தினரை துன்பத்திற்குள்ளாக்காதீர்கள்” என பாஜகவை விமர்சித்து பேசினார்.

கடந்த சில தினங்களுக்கும் முன்பாக பணமோசடி வழக்கில் ரூ.6.45 கோடி மதிப்பிலான உத்தவ் தாக்கரேவின் உறவினர் ஸ்ரீதர் மாதவ் பதான்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இதற்கு கண்டனம் தெரிவித்த உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

“என்னை சிறையில் அடைப்பதாக இருந்தால் நான் தயார். இதற்காக நான் பயப்படமாட்டேன்” என உத்தவ் தாக்கரே தெரிவித்தார். தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மாலிக் பிப்ரவரி 23 அன்று கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசு அவரை திரும்ப அழைக்கும் எனவும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com