
லடாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள அல்ச்சி கிராமத்தில் இருந்து வடக்கே 186 கிலோமீட்டர் தொலைவில் காலை 7.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளகோலில் 4.3 எனப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...