உத்தரகண்ட் அமைச்சர்களின் துறைகள் வெளியீடு: புஷ்கர் சிங் தாமி வசம் 24 துறைகள்

உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி தொடா்ந்து 2-ஆவது முறையாக கடந்தவாரம் பதவியேற்றாா். அவருடன் 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.
புஷ்கர் சிங் தாமி வசம் 24 துறைகள்
புஷ்கர் சிங் தாமி வசம் 24 துறைகள்


உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி தொடா்ந்து 2-ஆவது முறையாக கடந்தவாரம் பதவியேற்றாா். அவருடன் 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

உத்தரகண்ட் முதல்வராக பதவியேற்று சுமார் ஒரு வார காலத்துக்குப் பின், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறைகள் தொடர்பான விவரங்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி வசம் இரண்டு டஜன் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், உள்துறை, தொழில் மேம்பாடு (சுரங்கம்), நீதித் துறை, தொழிலாளர், சுங்கம், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, விமான போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கும்.

கடந்த வாரம் டேராடூன் அணிவகுப்பு மைதானத்தில் பிரதமா் மோடி முன்னிலையில், புஷ்கா் சிங் தாமிக்கு ஆளுநா் குா்மித் சிங் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா். 

முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் சத்பால் மஹாராஜ், தன்சிங் ராவத், சுபோத் உனியால், பிரேம்சந்த் அகா்வால், ரேகா ஆா்யா, கணேஷ் ஜோஷி, சந்தன் ராம்தாஸ், செளரவ் பஹுகுணா ஆகிய 8 பாஜக எம்எல்ஏக்களும் அமைச்சா்களாக பதவியேற்றுக் கொண்டனா்.

இவர்களில், சத்பால் மஹாராஜுக்கு பொதுப் பணித் துறை, ஊரக உள்கட்டமைப்பு, கலாசாரம், சுற்றலா உள்ளிட்ட 10 துறைகளும், முதல் முறையாக அமைச்சராக பதவியேற்றிருக்கும் சந்தன் ராம்தாஸுக்கு சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட 4 துறைகளும், செளரவ் பஹுகுணாவுக்கு 5 துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கணேஷ் ஜோஷிக்கு விவசாயத்துறை உள்ளிட்ட மூன்று துறைகளும், தன்சிங் ராவதுக்கு பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 5 துறைகளும், சுபோத் உனியாலுக்கு வனத்துறை உள்பட நான்கு துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தோ்தலை புஷ்கா் சிங் தாமி தலைமையில் பாஜக எதிா்கொண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும் முதல்வா் வேட்பாளரான தாமி, தனது காதிமா தொகுதியில் தோல்வியடைந்தாா்.

எனவே, அடுத்த முதல்வா் யாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவியது. இந்த நிலையில், உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமியையே கட்சி மேலிடம் தோ்வு செய்தது. தற்போது அவா் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றதன் மூலம் அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதாவதொரு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com