
குஜராத்தின் கீர் மற்றும் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலா கிராமத்தில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் மாவட்டத் தலைமையகமான வீரவாலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலாலா கிராமத்தில் வசிப்பவர்கள், நிடுநடுக்கம் உணர்ந்ததாகத் தெரிவித்தனர். தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடீரென தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் மாவட்ட நிர்வாகப்படி எந்த உயிரிழப்பும் சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
முதல் நிலநடுக்கம் காலை 6.58 மணிக்கு ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. தலாலா கிராமத்திலிருந்து 13 கி.மீ வடகிழக்கே உள்ள காந்திநகரை மையமாக கொண்ட பகுதியில் பதிவானதாக நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு நிலநடுக்கம், தலாலாவில் இருந்து 9 கி.மீ வடகிழக்கே மையமாகக் கொண்ட பகுதியில் இன்று காலை 7.04 மணிக்கு பதிவானதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.