
இந்தியாவில் மேலும் 3,157 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,157 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,30,82,345 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 19,500ஆக உள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 26 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,23,869 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,723 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,25,38,976 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதையும் படிக்க- நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15 வரை அவகாசம்
கடந்த 24 மணிநேரத்தில் 4,02,170 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 189.23 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 2,95,588 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 83.82 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.