
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்
இன்று அதிகாலை 5 மணியளவில் கார்-டிரக்கின் மீது மோதியது. இந்த சாலை விபத்தில் மஹேந்திரா காரில் பயணித்த 7 பேரில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கௌதம் புத்தா நகர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காரில் பயணித்தவர்கள் ஆக்ராவிலிருந்து நொய்டா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் கார், ஜெவார் டோல் பிளாசா அருகே டம்பர் டிரக் மீது மோதியது.
டிரக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.