சரியான நேரத்தில் பிரேக்.. கடந்து சென்றது யானை: செம்ம விடியோ

யானை கடக்க வருவதை வெகு தொலைவிலேயே பார்த்துவிட்டு ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக பிரேக் போட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்து செல்ல உதவினார்.
சரியான நேரத்தில் பிரேக்.. கடந்து சென்றது யானை: செம்ம விடியோ
சரியான நேரத்தில் பிரேக்.. கடந்து சென்றது யானை: செம்ம விடியோ

தண்டவாளத்தை யானை கடக்க வருவதை வெகு தொலைவிலேயே பார்த்துவிட்டு ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக பிரேக் போட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்து செல்ல உதவினார்.

இந்த நிகழ்வு முழுக்க ரயில் எஞ்ஜின் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட விடியோவில் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் குல்மாவிலிருந்து சிவோக் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஆர்.ஆர். குமார் மற்றும் எஸ். குண்டு ஆகியோர், தண்டவாளத்துக்கு மிக அருகே கரிய நிற உருவம் தென்படுவதை வெகு தொலைவிலிருந்தே கவனித்து விட்டார்கள்.

வனப்பகுதிகளில் ரயிலை இயக்கி அனுபவம் கொண்டிருந்த ஓட்டுநர், உடனடியாக நிலைமையை புரிந்து கொண்டு பிரேக் போட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார்.

ரயிலின் வேகம் குறையவும், அந்த பெரிய கரிய நிறம் தண்டவாளப் பகுதியை அணுகவும் சரியாக இருந்தது. ரயில் மெல்ல சென்று கொண்டிருக்க, எந்த பதற்றமும் இல்லாமல், தங்களது வழித்தடங்களை மறித்துப் போடப்பட்டிருந்த தண்டவாளத்தை மெல்ல கடந்து செல்கிறது. அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் அவ்வளவு பெரிய கரிய உருவம் சென்று மறைந்துவிட்டது. பிறகு அவ்விடத்தை ரயில் கடந்து செல்கிறது.

இந்த நிகழ்வு முழுக்க ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட கேமராவில் பதிவாகி, இன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பலரும் இந்த விடியோவைப் பார்த்து ரயில் ஓட்டுநருக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com