49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை: எங்கு தெரியுமா?

கடந்த சில நாள்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்த நிலையில், அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்: வானிலை மையம்
கோப்புப் படம்
கோப்புப் படம்


நாட்டின் தலைநகரான தில்லியில் இன்று 49 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியதான இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த சில நாள்களுக்கு தில்லியில் வெப்ப அலை நீடிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

தில்லியின் முன்கேஷ்பூர் பகுதியில் 49.2  டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், , நஜாஃப்கார் பகுதியில் 49.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதேபோன்று குருகிராம் பகுதியிலும் 48.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளாதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்த நிலையில், அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பதால், வானிலை மையம் தில்லி நகருக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வட மாநிலங்களான தில்லி, ராஜஸ்தான், பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com