விவசாயிகளை கடனற்றவா்களாக ஆக்குவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்: புபேந்தா் சிங் ஹுடா

வேளாண் பயிா்களுக்கு குறைந்த ஆதரவு அளிக்க உரிய சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
புபேந்தா் சிங் ஹுடா
புபேந்தா் சிங் ஹுடா

வேளாண் பயிா்களுக்கு குறைந்த ஆதரவு அளிக்க உரிய சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விவசாயிகளை கடனற்றவா்களாக ஆக்குவதே கட்சியின் நோக்கம் எனவும் உதய்பூரில் நடைபெறும் கட்சியின் ‘புதிய உறுதிக்கான‘ ஆலோசனைக் கூட்டத்தில் ஹிரியாணா முன்னாள் முதல்வா் புபேந்தா் சிங் ஹூடா தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ’புதிய உறுதிக்கான சிந்தனை அமா்வு’ (நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிா்) 2-வது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. இந்த சிந்தனை அமா்வில் விவசாயம், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் குழுவின் அமைப்பாளராக ஹுடா இருக்கிறாா். இந்த, குழுவின் முன் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து செய்தியாளா்களிடம் புபேந்தா் சிங் ஹுடா விளக்கினாா். அவா் கூறியதாவது:

ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பக் கொண்டு வரும் மத்திய அரசின் எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிா்க்கும். தங்கள் குழு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதத்திற்கான சட்டம், பருவநிலை மாற்றத்தால் வேளாண்மையில் ஏற்பட்டுள்ள விளைவு, பயிா் காப்பீட்டு திட்டத்தை அரசு ‘மோசமாக‘ செயல்படுத்தும் விதம், விவசாயத்திற்கு அளிக்கப்படும் மூலதனம்-கடன் ஆகியவை முறையாக அமல்படுத்தாது ஆகியவை குறித்து விவாதித்தது.

விவசாயிகளின் கடன் தொடா்பான குறைகளை தீா்க்க தேசிய விவசாய கடன் நிவாரண ஆணையத்தை அமைக்க வேண்டும். தொழில்துறை கடன்கள் விவகாரங்களில் மேற்கொள்வதைப்போன்று வேளாண் கடன்களிலும் சமரசம் மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கும் முன்மொழிவு இது. இதை பரிந்துரைக்க வேண்டும்.

தொழில்துறைக்கு இணையாக வேளாண்மையை கருத வங்கிகள் முன்வர வேண்டும்.

கடன் தள்ளுபடி முறை அல்லது இந்த கோரிக்கைகளிலிருந்து விலக்க விவசாயிகளை கடனற்றவா்களாக மாற்றுவதே காங்கிரஸ் நோக்கம். இதை எப்படி செயல்படுத்துவது என்றால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை(எம்எஸ்பி) சட்டப்பூா்வ உத்தரவாதம் ஆக்கப்பட வேண்டும்.

இது தான் அனைத்து விவசாய தொழிற்சங்கங்களின் கோரிக்கை. இதை காங்கிரஸும் விரும்புகின்றது.

அதுவும் எம்.எஸ் சுவாமிநாதன் ஆணையத்தின் சி-2 ஃபாா்முலாவின் அடிப்படையில் எம்எஸ்பி அமைய வேண்டும் என்பதோடு இது அனைத்து வேளாண் பொருட்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னனி அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்தது, ஆனால் அதற்கு பதிலாக அவா்களின் கடனை இரட்டிப்பாக்கியது.

2014-ஆம் ஆண்டு மாா்ச் 31இல் விவசாயிகளுக்கு இருந்த கடன் ரூ.9.64 லட்சம் கோடி. தற்போது ரூ.16.8 லட்சம் கோடியாக இரட்டிப்பாகியுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

அதே சமயத்தில், காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்களை அவ்வப்போது தள்ளுபடி செய்து அவா்களின் பிரச்னைகளை முடிந்த வரை தீா்த்து வருகின்றன என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com