
மண்டியா (கர்நாடகம்): கர்நாடகம் மாநிலத்தில் ஜாமியா பள்ளிவாசலை அனுமன் கோவிலெனக் கூறி பூஜை செய்ய வேண்டி வலதுசாரி ஆதரவாளர்கள் துணை ஆய்வாளரிடம் மனுக் கொடுத்துள்ளார்.
வலது சாரி ஆதரவாளர்கள் அது உண்மையில் அனுமன் கோவிலாக இருந்தது. பிறகு மசூதியாக மாற்றப்பட்டதாக கூறினார். பூஜை செய்ய வேண்டி வலது சாரி ஆதரவாளர் துணை ஆய்வாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
தன்னிடம் வரலாற்று ஆதாரம் இருப்பதாக கூறினார். திப்பு சுல்தான் பெர்ஷிய காலிஃப் அவருக்கு எழுதிய கடிதம் உள்ளது. தொல்பொருள் அறிஞர்கள் இதை விசாரிக்க வேண்டுமென கூறினார்.
மசூதியைச் சுற்றியுள்ள குளத்தில் குளிக்க வேண்டுமென கூடுதல் கோரிக்கையை வைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...