
கோப்புப்படம்
மத்திய பிரதேசம் கந்தவா மாவட்டத்தில் நர்மதா ஆற்றில் குளிக்கச் சென்ற நண்பர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நிகழ்ந்தது. குடும்பத்தினருடன் மாலை நர்மதா ஆற்றுக்கு குஷ்வாகா (23 வயது) மற்றும் பூல்மாலி ( 25 வயது) இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். நண்பர்கள் இருவரும் ஆற்றில் நீந்தி ஆழமான பகுதிக்குச் செல்ல முடிவு செய்து நீந்திச் சென்றுள்ளனர். அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.
இதனையடுத்து, அவர்களின் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவல்துறையினரின் உதவியோடு அந்த இளைஞர்கள் அவர்களின் குடும்பத்தினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர், அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே இறந்து விட்டதாகக் கூறினார். அந்த இருவரின் உடலும் உடற்கூறு முடிவடைந்தபின் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...