2023-க்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும்: தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக கோயில் கட்டுமானக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். 
2023-க்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும்: தகவல்
Published on
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக கோயில் கட்டுமானக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். 

2023ஆம் ஆண்டுக்குள் கீழ் தளத்தில் ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிறகு, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கட்டுமானப் பணிகள் தொடர்பாக கோயில் கட்டுமானக் குழு தலைவர் ரிபேந்திர மிர்ஸா வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமர் கோயில் அடித்தளம் அமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 

5 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட 17 ஆயிரம் கற்களைக் கொண்டு கோயில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் ஆந்திரத்திலிருந்து தரத்தில் உறுதி செய்யப்பட்ட கிராணைட் கற்கள் தரைதள கட்டுமானப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. கிராணைட் கற்களை உரிய நேரத்தில் எடுத்துவருவதற்கு ரயில்வேத் துறை உதவிவருகிறது.

கோயில் கட்டுமானத்திற்காக ராஜஸ்தான் பன்சி பஹர்பூர் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. கோயில் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கும் பணி முழுமையடைந்ததும், கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com