இதுவரை கரோனா பாதிக்கப்படாதவரா? நீங்கள் அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல..

நீங்கள் ஒருவேளை இதுவரை கரோனா பாதிக்கப்படாதவராக இருந்தால்? அது நிச்சயம் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, அதற்கும் ஒருபடி மேல் என்கிறார்கள்.
இதுவரை கரோனா பாதிக்கப்படாதவரா? நீங்கள் அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல..
இதுவரை கரோனா பாதிக்கப்படாதவரா? நீங்கள் அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல..


லண்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் குழுவினர் கூறுகையில், நீங்கள் ஒருவேளை இதுவரை கரோனா பாதிக்கப்படாதவராக இருந்தால்? அது நிச்சயம் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, அதற்கும் ஒருபடி மேல் என்கிறார்கள்.

எங்கும் நீக்கமற நிறைந்திருந்த கரோனாவிலிருந்து ஒரு மனிதர் பாதிக்கப்படாமல் இருக்க அவரது உடலில் இருக்கும் ஏதோ ஒரு எதிர்ப்பாற்றலை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? இல்லை அதனை வெறும் அதிர்ஷ்டம் என்று மட்டும் கூறிவிட முடியுமா? பிரிட்டனில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையிலேயே பதிவான எண்ணிக்கையை விடவும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். எந்த அறிகுறியும் இல்லாமல், அல்லது லேசான அறிகுறிகளுடன் கரோனா வந்திருக்கலாம் என்பது அறிவியல் பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

ஆனால், கரோனா வந்தும் அறிகுறி இல்லாதவர்களும், கரோனா பாசிடிவ் என்று பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்படாதவர்களும் இதுவரை கரோனா பாதிக்கப்படாதவர்களின் கணக்கில்தான் வருவார்கள்.

ஓரிரு நாள்கள் என்று இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த கரோனா பேரிடரில் இதுவரை ஒருவர் கரோனா பாதிப்பில் சிக்காமல் இருக்கிறார் என்றால், அவர்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் எப்படிப்பட்டது?

பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டாலும், இதற்கு எளிதான ஒரு பதில் இல்லை. இது ஏதோ சினிமாக்களில் வரும் சூப்பர் பவர் நபர்களைப் போல என்றும் கூறிவிட முடியாது.

ஒருபுறம் அறிவியலும் மறுபுரம் அதிர்ஷ்டமும் என இணைந்து செய்த வேலையாகத்தான் இருக்க முடியும். 

வாருங்கள் அதை எப்படி என்று பார்க்கலாம்.

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சிலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளலாம். மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படலாம். ஆனால், இறுதியில் அவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

அதிகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வகை கரோனாவும் பரவத் தொடங்கியிருந்தது. ஒருவர் வேலைக்கோ பள்ளிக்கோ கடைக்கோ போகும் போது அவர் அருகில் கரோனா வைரஸ் பாதித்த ஒருவர் வந்திருக்கவே மாட்டார் என்று ஒருபோதும் கூற முடியாது.

சிலர் மருத்துவமனையிலேயே பணியாற்றியிருப்பார்கள், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா பாதிப்பும் உறுதியாகியிருக்கும், ஆனால், அப்படியிருந்தாலும் சிலருக்கு கரோனா பாசிடிவ் ஆகியிருக்காது.

எனவே, கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதிலும், அதன் பாதிப்பு தீவிரமடைவதிலும், ஒருவரது வயது மற்றும் அவரது மரபியல் போன்றவை மிக முக்கியக் காரணிகளாக அமைவதை இதுவரை நடந்த பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. சிலருக்கு மிகச் சிறந்த வாழ்முறையும் உதவி செய்திருக்கிறது.

சிலருக்கு விட்டமின் டி பற்றாக்குறை கரோனா தொற்றுக்கு காரணமாக அமைகிறது. போதிய உறக்கமின்மையும் கூட.

கரோனா தீவிரமடைந்தவர்களில் 20 சதவீதம் பேருக்கு மரபியல் காரணங்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அவ்வளவு ஏன்? 
ஒரு ஆராய்ச்சிக்காக தன்னார்வலர்களின் மூக்குப் பகுதியில் இருந்த செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் குப்பிகளில் அந்த செல்களுடன் வைரஸ்களை சேர்த்தபோது அந்த செல்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்று ஆராய்ந்தோம். 

இதில் ஒரே ஒருவரின் செல்லில் மட்டும் கரோனா வைரஸ் வளரவேயில்லை. எனவே, இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இதுதான் என்று ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. சரி இந்த எதிர்ப்பாற்றல் எத்தனை நாள்களுக்கு இருக்கும் என்றும் கூறமுடியாது.

இந்த நாள்வரை கரோன தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்றால், உண்மையிலேயே கரோனாவை எதிர்க்க உங்கள் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் இருக்கலாம். அல்லது அது வெறும் ஒரு அதிர்ஷ்டமாகக் கூட இருக்கலாம். இரண்டுமாகக் கூடஇருக்கலாம்.

எனவே, தற்போது இருக்கும் அதே எச்சரிக்கையுடன் தொடருங்கள். ஏனென்றால் வைரஸ் பற்றி நாம் அறிந்து கொண்டது குறைவுதான். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com