பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் உயரும்: ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மீண்டும் உயரத் தொடங்கும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி


புதுதில்லி: பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மீண்டும் உயரத் தொடங்கும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

பெட்ரோல், டீசல் விலை உயா்வால், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், விலைக் குறைப்பு தொடா்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை தனது ட்விட்டா் பதிவுகளில் வெளியிட்டாா். 

அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.

இதன் காரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

மேலும், மத்திய அரசைப் பின்பற்றி, அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக, கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது, உள்ளூா் வரியைக் குறைக்காத மாநிலங்களும் தற்போது வரியைக் குறைக்க வேண்டும் என  நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினார். 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என்ற அளவில் உயரத் தொடங்கும் என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் எரிபொருள் விலை மற்றும் உயர்வுகளை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் உயரத் தொடங்கும். 

2020 ஆம் ஆண்டு மே 21 இல் ரூ.69.05 ஆகவும், இது நடப்பு ஆண்டில் அதே தேதியில் ரூ.105.4 ஆக உயர்ந்தது. 2020 மார்ச் 1 இல் ரூ.95.04 ஆக விற்பனையான பெட்ரோல் விலை, 2022 மே 21 இல் ரூ.105.04 ஆகவும், தற்போது மே 22 இல் ரூ.96.07க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், பெட்ரோல் விலை மீண்டும் நாள்தோறும் ரூ.0.8 மற்றும் ரூ.0.3 என்ற அளவில் உயரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும், பணவீக்கத்திலிருந்து உண்மையான நிவாரணம் பெறுவதற்கு மக்கள் தகுதியானவர்கள் என்பதால், மக்களை முட்டாளாக்கும் போக்கை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com