1% கமிஷன்.. அதிகாரிகளிடமே ஒப்பந்தம்.. சுகாதார அமைச்சரை நீக்கிய பஞ்சாப் முதல்வர்

அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 1 சதவீத கமிஷன் தருவதாக அரசு அதிகாரிகளிடம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், மாநில சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை பதவியிலிருந்து நீக்கியுள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த்
கோப்புப்படம்
கோப்புப்படம்


அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 1 சதவீத கமிஷன் தருவதாக அரசு அதிகாரிகளிடம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், மாநில சுகாதார அமைச்சர் விஜய் சிங்லாவை பதவியிலிருந்து நீக்கியுள்ளார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.

அரசு ஒப்பந்தங்களில் ஒரு சதவிதம் கமிஷன் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசு ஒப்பந்தங்களுக்கு ஒரு சதவீதம் கமிஷன் தருவதாக அரசு அதிகாரிகளிடமே ஒப்பந்தம் போட்டதாக அமைச்சர் விஜய் சிங்லா மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஜய் சிங்லாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, வெளிப்படையான ஆட்சியை நடத்தும் என்று பகவந்த் மான் உறுதியளித்திருந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எழுந்த அமைச்சர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று கடந்த மார்ச் மாதம் ஒரு பெண் உள்பட 10 போ் அமைச்சா்களாக பதவியேற்றனர். இதில் 8 போ் முதல் முறை எம்எல்ஏக்களாவா்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த பகவந்த் மான் பதவியேற்றாா். இவரது தலைமையிலான அமைச்சரவையில், பல்ஜீத் கெளா், விஜய் சிங்லா உள்பட 8 போ் முதல் முறை எம்எல்ஏக்களாவா். கடந்த முறை எம்எல்ஏவாகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஹா்பால் சிங் சீமா மற்றும் குா்மீத் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தற்போது இவர்களில் விஜய் சிங்லா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com