விடுமுறை விட்டாச்சு: திருப்பதியை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால், திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதி நாள்களில் கூட்டம் அலைமோதுகிறது.
விடுமுறை விட்டாச்சு: திருப்பதியை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்
விடுமுறை விட்டாச்சு: திருப்பதியை நோக்கி படையெடுக்கும் பக்தர்கள்


திருப்பதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால், திருப்பதி திருமலை கோயிலில் வார இறுதி நாள்களில் கூட்டம் அலைமோதுகிறது.

வழக்கமாக வார இறுதி நாள்களில் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்தான். ஆனால், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள்  கூட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. கூட்டம் அதிகரித்திருப்பதால், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சனிக்கிழமைகளில் பக்தர்கள் 12 - 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கும் நிலை காணப்படுகிறது. கோயில் வளாகத்துக்கு வெளியே வைகுந்தம் காம்ப்ளக்சின் 33 குடோன்களிலும் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டாலும், அதையும் தாண்டி  சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு மக்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.

கூட்டம் அதிகமாக காணப்படுவதால் வார நாள்களில் நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். உண்டியல் காணிக்கை சராசரியாக 4 கோடி அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com