இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியைக் கடந்தது!

நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியைக் கடந்தது!

நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2022 வசூலான ஜிஎஸ்டி வசூலுக்கு அடுத்தபடியான அதிகபட்சம் அக்டோபர் மாத ஜுஎஸ்டி வசூல் ஆகும். தொடா்ந்து 8-ஆவது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.1.30 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூலானது.

அக்டோபர் 2022-ல் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ. 1,51,718 கோடி, இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 26,039 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,396 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.81,778 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 37,297 கோடி உள்பட) செஸ் ரூ. 10,505 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூலான ரூ. 825 கோடி உள்ளடங்கியது) ஆகும்.

அக்டோபரில் தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 25% அதிகரித்து ரூ.9,540 ஆகவும், புதுச்சேரியில் ஜிஎஸ்டி வரி வசூல் 34% அதிகரித்து ரூ.204 கோடி என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com