மோர்பி தொங்கு பால விபத்து தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்துக்கு காரணம்: தலைமைத் தேர்தல் அதிகாரி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை தாமதமாக அறிவித்ததற்கு மோர்பி தொங்கு பால விபத்தும் ஒரு காரணம் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
மோர்பி தொங்கு பால விபத்து தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்துக்கு காரணம்: தலைமைத் தேர்தல் அதிகாரி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை தாமதமாக அறிவித்ததற்கு மோர்பி தொங்கு பால விபத்தும் ஒரு காரணம் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியத் தேர்தல் ஆணைய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இதனை தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: மோர்பி தொங்கு பால விபத்து குறித்த அறிக்கையை வெளியிடுவதை தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளும். குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சமமான களத்தை உருவாக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் செயல்படும். பாஜக சார்பில் பிரிஜேஷ் மெர்ஜா மோர்பி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படும். தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சமமான களம் அமைவதை இந்த மோர்பி தொங்கு பால விபத்து தடுக்குமானால் தேர்தல் ஆணையம் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தும். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்திருக்கலாம். ஆனால், மோர்பி தொங்கு பால விபத்து மக்களை கவலையடைச் செய்திருந்ததால் தேர்தல் தேதியினை தாமதமாக அறிவிக்க வேண்டியதாயிற்று. மோர்பி தொங்கு பால விபத்தும் தேர்தல் தேதியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு ஒரு காரணம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com