மும்பையில் புறநகர் விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கம்

மும்பை பகுதியில் புறநகர் விரைவு ரயில்கள் 15-20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மும்பை பகுதியில் புறநகர் விரைவு ரயில்கள் 15-20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் மும்பைப் பிரிவு ரயில்வே மேலாளர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்து புறநகர் விரைவு ரயில்களும் 15-20 நிமிடங்கள் தாமதமாக இயங்குகின்றன. 

எனவே, பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மும்பையில் 6 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 70 ரயில்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஆறு நீண்ட தூர ரயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக மும்பை வந்தடைந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com