பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய தட்சிண கன்னடா!

கர்நாடகத்தின் கடலோரப் பகுதியான தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. 
பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கிய தட்சிண கன்னடா!

பன்றிக்காய்ச்சல்

கர்நாடகத்தின் கடலோரப் பகுதியான தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் பன்றிக்காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து தட்சிண கன்னடா துணை ஆணையர் எம்.ஆர்.ரவிக்குமார் கூறுகையில், 

மனிதர்களுக்கோ மற்ற விலங்குகளுக்கோ இந்த காய்ச்சல் பரவாது என்பதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. பன்றி இறைச்சியைச் சரியாகச் சமைத்து சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 

நகரின் புறநகரில் உள்ள நீர்மார்கா கிராமத்தின் கேல்ராய் என்ற இடத்தில் உள்ள ஒரு பண்ணையில் கடந்த அக்டோபர் மாதத்தில் சில பன்றிகளுக்கு காய்ச்சல் மற்றும் நோய்த் தொற்றுக்கான பிற அறிகுறிகள் கண்டறியப்பட்டது. 

பாதிக்கப்பட்ட பன்றிகளின் மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அக்.31ஆம் தேதி அனுப்பப்பட்ட நிலையில், அக் 31 அன்று பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அருண் வன்ட்சே தெரிவித்தார்.

முடிவுகள் வருவதற்குள் பண்ணையிலிருந்த 200 பன்றிகளில் 120 பன்றிகளுக்குத் தொற்று பரவி இறந்துவிட்டதாக அவர் கூறினார். மீதமுள்ள பன்றிகள் துணை ஆணையரின் அனுமதி பெற்று அப்புறப்படுத்தப்பட்டன.

நோயால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அதைச்சுற்றி 10 கிமீ பகுதி விழிப்புணர்வு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com