
'கண்கள் நமது பொக்கிஷங்கள்': பாதுகாக்கும் பயிற்சியை சொல்லிக் கொடுக்கும் ஷில்பா ஷெட்டி
சென்னை: அவ்வப்போது உடல்நலன் தொடர்பாகவும், யோகாசனங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி, யோகா விடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.
இன்று அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், கண்கள் நமது பொக்கிஷங்கள். அவற்றை கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
(1/3)
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) November 7, 2022
I recently read somewhere that continuous exposure to screens causes dryness and red eye; now commonly called ‘computer vision syndrome’. This information really got me worried.#MondayMotivation #SwasthRahoMastRaho #FitIndiaMovement #SSApp #FitIndia #eyecare #netrayoga pic.twitter.com/FrguvIBXC1
மேலும், கணினி உள்ளிட்டவற்றை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் அவற்றை வராமல் தடுக்க சில பயிற்சிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாள்தோறும் சில நிமிடங்கள் ஒதுக்கி, நேத்ரா யோகா செய்வதன் மூலம், நமது கண்கள் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும். இதனைத் தொடர்ந்து செய்யும் போது கண்களின் பார்வை அதிகரிக்கும். கணினி போன்ற திரைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் கண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் கூட சரியாகி, நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நமது கண்கள் நமக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷங்கள். அவற்றை கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் நேத்ரா யோகா செய்வது எப்படி என்று விடியோவும் பதிவிட்டுள்ளார். அதில், கண்களை மேலும் கீழம் அசைப்பது, உருட்டுவது, சிமிட்டுவது என அழகாகச் செய்து காட்டியுள்ளார்.
இந்த விடியோவைப் பார்த்து சில நிமிடங்கள் ஒதுக்கி கண் பயிற்சியை மேற்கொண்டு கண்பார்வையை மேம்படுத்திக் கொள்ளலாமே.