‘இந்த இரண்டு சேனல்களிலிருந்து வந்திருந்தால் வெளியே செல்லுங்கள்’: கேரள ஆளுநர்

இரண்டு மலையாள சேனல்களின் பெயரை குறிப்பிட்டு, அதன் செய்தியாளர்கள் உள்ளே இருந்தால் வெளியே செல்லுங்கள் என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்
கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

இரண்டு மலையாள சேனல்களின் பெயரை குறிப்பிட்டு, அதன் செய்தியாளர்கள் உள்ளே இருந்தால் வெளியே செல்லுங்கள் என்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இன்று செய்தியாளர்களை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சந்தித்தார்.

அப்போது, இரண்டு மலையாள சேனல்களின் பெயரை குறிப்பிட்டு, செய்தியாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியே செல்லுங்கள், இல்லையென்றால் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று கூறினார்.

மேலும், நான் ஊடகங்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். எப்போதும் ஊடகங்களுக்கு பதிலளிப்பேன், ஆனால் ஊடகங்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் வந்திருக்கும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

கேரளத்தில் ஆளுநர் மற்றும் ஆளும் அரசு இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஏற்கெனவே அக்டோபர் 24ஆம் தேதி இந்த இரண்டு மலையாள சேனல்கள் உள்பட நான்கு சேனல்கள் ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள தடைவிதிப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.

ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் கூறுகையில்,

அவர் கேரள ஆளுநராக இருந்தாலும் பெரும்பாலான நேரம் தில்லியில்தான் இருப்பார். அங்கிருந்து அதிகாரம் செய்கிறார். தனிப்பட்ட முறையில் அல்ல, ஆளுநரின் முறையையே நாங்கள் கேள்வி கேட்கிறோம். அமைச்சரவையின் முடிவுகளை செயல்படுத்துவதுதான் ஆளுநரின் வேலை. பாஜகவின் அரசியலை ஆளுநர் விரிவுபடுத்த முயற்சிக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com