நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

News image

வெளியானது பொதுத் தேர்வு அட்டவணை: +2 மார்ச் 13, 10ம் வகுப்புக்கு ஏப்ரல் 6ஆம் தேதி தொடக்கம்

Updated On :7 நவம்பர் 2022, 4:21 pm IST

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 8.8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

மேலும், தமிழகத்தில் தற்போது 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்வை சுமார் 8.50 லட்சம் பேர்  எழுதுகிறார்கள்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் பேர்  எழுதுகிறார்கள். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

Story image

11-ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை

Story image

12-ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை

Story image

ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் வெளியாகி பிறகு மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கும்.

அந்த வகையில், 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டுள்ளார்.

தேர்வு அட்டவணை இன்று வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளில் ஆசிரியர்கள் தொடங்கியிருக்கிறார்கள். மாணவர்களுக்கும் தேர்வு அட்டவணை வெளியானதும் பொறுப்புடன் பாடங்களைப் படிக்கத் தொடங்குவதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.