இன்று திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
நாடாளுமன்ற திமுக உறுப்பினா்கள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை (நவ.28) நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்
நாடாளுமன்ற திமுக உறுப்பினா்கள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை (நவ.28) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் மன்றத்தில் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதா திங்கள்கிழமை கொண்டுவரப்படவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

