
வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பிகாரிலிருந்து சர்வதேச எல்லைப் பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் இருந்து வடக்கு வங்கத்தைப் பிரிக்கவே இந்த சதிவேலை செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆயதங்களை கடத்துவதற்காக மிக முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுப்பதற்காக மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலர் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள். அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.