இந்தியாவுக்கு தீங்கு நினைத்தால் தக்க பதில் தரப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு தக்க பதில் தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு தீங்கு நினைத்தால் தக்க பதில் தரப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு தக்க பதில் தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதே பாஜக அரசின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். ஹரியாணாவில் போர்வீரர் பிரித்விராஜ் சௌகானின் சிலையினை திறந்து வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பிரித்விராஜ் சௌகானின் சிலையினை திறந்து வைத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா இனியும் வலிமையில்லாத நாடு எனக் கூற முடியாது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எங்களுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தால் தக்க பதில் தரப்படும். இதனை எங்களது ராணுவ வீரர்கள் பல நேரங்களில் நிரூபித்துள்ளார்கள். 2016ஆம் ஆண்டின்  சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2109ஆம் ஆண்டின் வான்வழித் தாக்குதல் அதற்கான உதாரணங்கள். கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கலானியாதிக்க மனநிலையில் இருந்து நாம் வெளியில் வர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை தற்போது உள்ள காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com