இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என வெளியுறவுத் துறை செயலர் வினய் தெரிவித்துள்ளார்.
பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை ( நவம்பர் 14) இந்தோனேசியா செல்ல உள்ளார். இந்த மாநாட்டில் ரஷியா-உக்ரைன் போர் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிக்க: ஹன்சிகா சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம்!
இது குறித்து வெளியுறவுத் துறை செயலர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகின் பல்வேறு தலைவர்களும் பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் உலகப் பொருளாதாரம், ஆற்றல், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்க உள்ளார் என்றார்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பு விடுத்ததையடுத்து பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்.
இதையும் படிக்க: மும்பையில் பெண் யாசகர் அடித்துக்கொலை: ஒருவர் கைது
இந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தோனேசியா தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் சோல்ஸ் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே. தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்

சோஃபி டிவைன் அசத்தல்: நியூஸிலாந்து வெற்றி

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

