போலி புற்றுநோய் மருந்து மோசடி: புற்றுநோயை விடவும் ஆபத்தான குற்றவாளிகள்

புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து உலகளவில் விற்பனை செய்த மோசடிக் கும்பலை தில்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
போலி புற்றுநோய் மருந்து மோசடி: புற்றுநோயை விடவும் ஆபத்தான குற்றவாளிகள்
போலி புற்றுநோய் மருந்து மோசடி: புற்றுநோயை விடவும் ஆபத்தான குற்றவாளிகள்


புது தில்லி: இரண்டு மாத காலம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து உலகளவில் விற்பனை செய்த மோசடிக் கும்பலை தில்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மிகவும் அபாயக்கட்டத்தில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் விலை உயர்ந்த மருந்துகளை தயாரிக்கும் 20 சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களில், போலி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ், ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர் மற்றும் 3 பார்மா நிறுவன உரிமையாளர்கள், ஒரு பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த போலியான மருந்து மோசடியில் ஈடுபட்ட கும்பல், அதில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு, இந்தியா மற்றும் நேபாளத்தில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சிறப்பு காவல்துறை ஆணையர் ரவீந்திர சிங் யாதவ் இது பற்றி கூறுகையில், சோனிபட் தொழிற்சாலை மற்றும் காஷியாபாத்தில் மருந்துகளை பேக் செய்து பாதுகாக்கும் கிடங்கு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு 20 மருந்து கம்பெனிகளின் பெயரில் தயாரிக்கப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹுபே பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, இந்தியத மருத்துவக் கழகத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்ற டாக்டர் பிபித்ரா நாராயண் பிரதா, மற்ற அனைத்து மருத்துவர்களைப் போலத்தான் தனது வாழ்க்கையையும் தொடங்கியிருக்கிறார்.

ஆனால்,  அவருக்கு அறிமுகமான வங்கதேசத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சொன்ன இந்த மருந்து தயாரிப்பு ஆசைதான் அவரின் வாழ்வை திசை திருப்பியது என்கிறார்கள் மருத்துவர்கள்

நன்குப் படித்து, தொழில்நுட்பத்தில் திறன் பெற்ற தனது உறவினர்கள் இருவரை உதவிக்கு வைத்துக் கொண்டு, போலியாக புற்றுநோய் மருந்துகளைத் தயாரித்து, அதனை 50 சதவீதம் விலை குறைவாக சந்தையில் விற்பனை செய்து லாபம் பார்த்துள்ளார். சுமார் 20 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் மருந்துகளை இவர் போலியாக தயாரித்திருக்கிறார்.

சந்தையில் ஒரு சில ரூபாய்களுக்குக் கிடைக்கும் வெறும் மாவுப் பொருள்களை, இந்த மருந்துக் குப்பிகளில் நிரப்பி, அதனை புற்றுநோய் மருந்துகள் என லேபிள் இட்டு, ஒரு மாத்திரை ரூ.20,000க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடைந்ததோடு, பல உயிர்கள் பலியானதற்கும் நேரடியாக குத்திக் கொலை செய்யாமல், காரணமாகியிருக்கிறார்கள்.

அதாவது, ஒரு மாத்திரை அட்டை சந்தையில் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானால், இந்த போலி மாத்திரைகள் ரூ.1.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து, போலியான மருந்துகளை விற்பனை செய்து, பணத்துக்காக அப்பாவிகளின் உயிரோடு விளையாடியிருக்கிறது இந்தக் கும்பல் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி கும்பலிடம் சிக்கி உயிரை இழந்தவர்களின் உறவினர்களையும் காவல்துறையினர் விசாரணைக்காகத் தேடி வருகிறார்கள். இதுபோன்ற உயிர்க்காக்கும் மருந்துகளை உரிய இடத்தில் வாங்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.

காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து பபித்ரா நாராயண் மற்றும் 6 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com