மாரடைப்பு காரணமாக வங்காள நடிகை ஐந்த்ரிலா சர்மா காலமானார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐந்த்ரிலா சர்மா(24). இவர் 'ஜுமுர்' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் 'அமி திதி நம்பர் 1' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
அண்மையில் மூளை பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.
இதையும் படிக்க- தில்லியில் சினை நாயை அடித்துக்கொன்ற மர்மநபர்கள்
அவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஐந்த்ரிலா சர்மா, ஏற்கெனவே 2 முறை புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


