மீன்வளத் துறையில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்: கோவா அமைச்சர்!

மீன்வளத் துறையில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும், இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் உதவும் என்று அம்மாநில அமைச்சர் நிர்காந்த் ஹலர்ன்கர் தெரிவித்தார். 

உலக மீன்பிடி தினத்தை முன்னிட்டு பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சுரங்கம் போன்று மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு மீன்பிடித்தல் முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. 

இளம் தலைமுறையினர் மீன்பிடித் தொழிலில் ஆர்வம் காட்டினால், மாநிலத்தின் பொருளாதாரம் முக்கியமாக மீன்பிடித் தொழிலைச் சார்ந்திருக்கும். 

மீன் வளங்களை அதிகமாகச் சுரண்டுவது எதிர்காலத்தில் ஒரு பிரச்னையாக இருக்கலாம். அதனால்தான் சிறந்த விளைச்சலைப் பெற சமீபத்திய தொழில்நுட்பங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். 

மாநிலத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்தவர்கள் உள்பட மீன்வளத் துறையில் ஆர்வம் காட்டி அதை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com