
கோப்புப்படம்
போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை 'ப்ளூ டிக்' குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நிறுவனங்கள், தனிநபர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் நிற வேறுபாடுகளுடன் பயன்படுத்த ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ட்விட்டா் பயன்பாட்டாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை (ப்ளூ டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலா் (ரூ.662) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளா் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.
இதன்மூலம் ‘ப்ளூ டிக்’ பயனாளிகள் பதிலளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், போலி தகவல்களை அழிப்பதற்கு இது உதவும் என்றும் அவா் குறிப்பிட்டார்.
மேலும், ட்விட்டரில் தகவல்களைப் பதிவிடுபவா்களுக்கு வருவாயை ஈட்டுவதற்கும் இந்தக் கட்டணம் உதவும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிக்க: ஒடிஸா: சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: 19 ரயில்கள் ரத்து
இந்நிலையில், போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை 'ப்ளூ டிக்' குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.