குற்ற மனப்பான்மை கொண்டவர்களை ஆம் ஆத்மி ஊக்குவிக்கிறது: மீனாட்சி லேகி

குற்ற மனப்பான்மை கொண்டவர்களை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டினார். 
மீனாட்சி லேகி
மீனாட்சி லேகி

புது தில்லி: குற்ற மனப்பான்மை கொண்டவர்களை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டினார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சத்யேந்தர் ஜெயின் ஆம் ஆத்மி அமைச்சராகத் தொடர்கிறார். அவர் இன்னும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் பிசியோதெரபிஸ்ட் என்று கூறப்படும் மசாஜ் செய்பவர் கூட போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

சிறையில் இருக்கும்போது, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரால் ஜெயின் மசாஜ் செய்து மகிழ்கிறார். அப்படிப்பட்ட நபரை என் அருகில் வரக் கூட நான் அனுமதித்திருக்க மாட்டேன். 

ஜெயின் தனது அறையில் உள்ளவர்களுடன் பேசுவதும், ஆடம்பரமான உணவை ருசிப்பதும், தொலைக்காட்சி பார்ப்பதும் வெளியில் தெரியாது மக்கள் அதைக் கவனிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறார். 

ஆம் ஆத்மியின் நடைமுறைகள் அது என்ன பிரசங்கிக்கிறது என்பதை நோக்கி நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாக அவர் கூறினார். 

தில்லி மக்களை தவறாக வழிநடத்துவதைத் தவிர ஆம் ஆத்மி வேறு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com