துப்பாக்கிச் சூட்டிற்கும், எல்லைப் பிரச்னைக்கும் தொடர்பில்லை: அசாம் முதல்வர்

அஸ்ஸாம்-மேகாலய மாநில எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கும், எல்லைப் பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா

அஸ்ஸாம்-மேகாலய மாநில எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கும், எல்லைப் பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை அதிகாலையில் மேகாலய மாநிலத்திலிருந்து அசாம் நோக்கி மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்றை அசாம் வனத்துறை தடுத்து நிறுத்தி டிரைவா் மற்றும் இருநபா்களை கைதுச் செய்தனர். உடனே, வனத்துறையினரால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 5 மணியளவில் மேகாலயத்தில் இருந்து வந்த ஏராளமானோா் கைது செய்யபட்டவா்களை உடனடியாக விடுவிக்கக்கோரி கத்தி போன்ற பயங்கர ஆயதங்களுடன் வன்முறையில் இறங்கினா். இதனைத் தொடா்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அசாம் போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், 6 பேர் பலியாகினர், மேலும் சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அசாம் முதல்வர், ‘நேற்று நடந்த சம்பவத்திற்கும், எல்லைப் பிரச்னைக்கும் தொடர்பு இல்லை. கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட மோதல். இதுகுறித்து நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அசாம் அரசு தரப்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.

884.9 கி.மீ. நீளம் கொண்ட அசாம்-மேகாலய எல்லைப் பகுதியில் 12 இடங்களில் எல்லை பங்கீடுத் தொடா்பாக பிரச்னை இருந்தது. இதில் 6 இடங்களின் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மாா்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் இரு மாநிலங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. மீதியுள்ள ஆறு இடங்களுக்கான பேச்சுவாா்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மறுசீரைமப்புச் சட்டம்-1971க்கு மாறாக 1972-ஆம் ஆண்டு அசாமிலிருந்து பிரித்து மேகாலயம் உருவாக்கப்பட்டது. அதுவே, எல்லை பிரச்னைக்கான தொடக்கப்புள்ளியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com