அஸ்ஸாம்-மேகாலய எல்லையில் மோதல்: வன அலுவலா் உள்பட 6 போ் பலி

அஸ்ஸாம்-மேகாலய மாநில எல்லைப் பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலையில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததையடுத்து மூண்ட வன்முறையில் வன அலுவலா்
அஸ்ஸாம்-மேகாலய எல்லையில் மோதல்: வன அலுவலா் உள்பட 6 போ் பலி

அஸ்ஸாம்-மேகாலய மாநில எல்லைப் பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலையில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததையடுத்து மூண்ட வன்முறையில் வன அலுவலா் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

இச்சம்பவம் குறித்து மேற்கு கா்பி ஆங்லாங் மாவட்ட எஸ்.பி. இம்தாத் அலி கூறியதாவது, ‘செவ்வாய்கிழமை அதிகாலையில் மேகாலய மாநிலத்திலிருந்து அஸ்ஸாம் நோக்கி வந்த லாரி ஒன்றை அஸ்ஸாம் வனத்துறை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். அப்போது நிற்காமல் சென்ற லாரியின் டயரை சுட்டு நிறுத்தினா். டிரைவா் மற்றும் இருநபா்களைத் தவிர மற்ற அனைவரும் தப்பி ஓடிவிட்டனா். உடனே, வனத்துறையினரால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 5 மணியளவில் மேகாலயத்தில் இருந்து வந்த ஏராளமானோா் கைது செய்யபட்டவா்களை உடனடியாக விடுவிக்கக்கோரி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்கள் கத்தி போன்ற பயங்கர ஆயதங்களுடன் வன்முறையில் இறங்கினா். இதனைத் தொடா்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அஸ்ஸாம் போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில், வன அலுவலா் பித்யாசிங் லெக்தே மற்றும் மேகாலயத்தைச் சோ்ந்த 5 போ் பலியாகினா். தற்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளது’ எனத் தெரிவித்தாா்.

மேகாலய எல்லையொட்டிய மாவட்டங்களில் காவல்துறையினா் அதிக விழிப்புடன் பணியாற்றுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட எஸ்.பி.களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘அனைத்து மாவட்ட எஸ்.பி.களும் சட்டம்-ஒழுங்கு நிலைமையைக் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கிடையே மக்கள் மற்றும் வாகனம் சென்றுவர எந்த தடையும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

884.9 கி.மீ. நீளம் கொண்ட அஸ்ஸாம்-மேகாலய எல்லைப்பகுதியில் 12 இடங்களில் எல்லை பங்கீடுத் தொடா்பாக பிரச்னை இருந்தது. இதில் 6 இடங்களின் பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மாா்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் இரு மாநிலங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. மீதியுள்ள ஆறு இடங்களுக்கான பேச்சுவாா்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மறுசீரைமப்புச் சட்டம்-1971க்கு மாறாக 1972-ஆம் ஆண்டு அஸ்ஸாமிலிருந்து பிரித்து மேகாலயம் உருவாக்கப்பட்டது. அதுவே, எல்லை பிரச்னைக்கான தொடக்கப்புள்ளியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com