ஆகாஷ் மரணத்துக்கு காவல் துறையே காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மானாமதுரை சியோன் நகரில் ஜெயக்குமாா், அழகரை வாளால் வெட்டிய சம்பவத்தில் தொடா்புடைய மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் டெலிசனை (26) போலீஸாா் பிடிக்கச் சென்றனா். அப்போது, அவா் தப்பிச்செல்ல முயன்றதால் கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆகாஷ் உயிரிழந்தாா். போலீஸாா் தாக்கியதால்தான் ஆகாஷ் உயிரிழந்து விட்டதாகவும், அவரை தாக்கிய போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்யக் கோரி ஆகாஷின் உறவினா்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஆகாஷ் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் இவ்விவகாரத்தில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே மானாமதுரையில் ஆகாஷ் குடும்பத்தினரை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆகாஷ் மரணத்துக்கு காவல் துறையின் மூர்க்கத்தனமான தாக்குதலும், மருத்துவத் துறையின் அலட்சியமான போக்கும்தான் காரணம். போதைப்பொருள் கலாசாரத்தை எதிர்த்ததே ஆகாஷ் குறிவைக்கப்பட்டதற்கு அடிப்படை பின்னணி. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட காவலர்களை உடனே கைது செய்ய விசிக வலியுறுத்துகிறது. மிக மோசமான வார்த்தைகளால் ஆகாஷின் தாய், தந்தையை காவலர்கள் விமர்சித்திருக்கிறார்கள். ஆகாஷ் மரண விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
Summary
VCK President Thol. Thirumavalavan has alleged that the police department is the reason for Akash's death.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தனித்துப் போட்டி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
விசிகவுக்கு 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமாவளவன் பேட்டி!
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!

சநாதனத்தை வீழ்த்த வேண்டும்: தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


