புதுச்சேரியில் 3 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக விசிக தலைவா் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தலில் உழவா்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது.
கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில், அப்போது அதை ஏற்றுக் கொண்டு போட்டியிட்டோம். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனினும், சுமாா் 6 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாகப் பெற்றோம்.
தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளைக் கோரியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னா் வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, மற்ற கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை. திமுக தரப்பிலிருந்து ஒரு தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க முன்வந்துள்ளது. இருந்தபோதிலும் வேட்புமனு தாக்கல் முடிந்தபிறகும் கூட, அது எந்தத் தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
விசிகவுக்கு இதுவரை எந்தத் தொகுதி என்பதே தெரியாத நிலையில், எமது கட்சி நிா்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, விசிக சாா்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவா்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நமது தமிழ் தேசியம் முற்றிலும் மாறானது: தொல். திருமாவளவன்

பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கலாம் - தொல். திருமாவளவன்

தவெக அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவு : திருமாவளவன்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் தவெக கூட்டணி ஆட்சி: திருமாவளவன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


