தில்லி இளம்பெண் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: அஜித் பவார்

தில்லி இளம்பெண் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தில்லி  இளம்பெண் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: அஜித் பவார்

தில்லி இளம்பெண் ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனவும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

கால் சென்டர் ஊழியராக இருந்த ஷ்ரத்தா வால்கருடன், திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த அஃப்தாப் பூனாவாலா, அவரை கொலை செய்து 35 துண்டுகளாக்கி, தில்லி முழுவதும் உடல் பாகங்களை வீசியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது குறித்து ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு ஷ்ரத்தா வால்கர் மும்பை காவல் நிலையத்தில் அஃப்தாப் மீது  புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அஃப்தாப் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும், தன்னை துண்டு துண்டாக வெட்டி விடுவதாக மிரட்டியதாகவும் வால்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தப் புகாரை அவரே திரும்பப் பெற்ற காரணத்தினால் அந்த விவகாரத்தில் காவல் துறை பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

இந்த சூழலில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அஜித் பவார் இந்த கொலை வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரித்து குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடத்தில் அவர் பேசியதாவது: இந்த கொலை வழக்கில் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டிருந்தால் அவர்களிடத்திலும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி ஒன்றும் பயனில்லை. இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அந்த தண்டனை இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத் தண்டனை மட்டும் தான் கிடைக்கும் என்பது இந்த சமுதாயத்திற்கு தெரிய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com