
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராடி ஏதாவது ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டராவது உயிர்தியாகம் செய்துள்ளாரா என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி சாவர்க்கர் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.
இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலின் டிச.4 ஆம் தேதி தில்லி செல்வது ஏன்?
இந்நிலையில் இதுதொடர்பாக எழுந்த விவாதத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உயிர்தியாகம் செய்துள்ளனரா என கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் சாசன தினத்தையொட்டி அரசியல் சாசன ஊர்வலத்தை அம்மாநில காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சித்தராமையா, “ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு நடவடிக்கையையும் பாஜக அரசு மேற்கொள்ளவில்லை.
இதையும் படிக்க | வடிவேலு குரலில் வெளியானது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ 2ஆவது பாடல்
இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பாஜகவினர் எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராகவே செயல்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கத்தை எதிர்த்தவர்கள் பாஜகவினர். இதற்கு முன்னும், தற்போது அவர்கள் சமூக நீதிக்காக அவர்கள் எதையும் செய்ததில்லை. இனியும் அவர்கள் அப்படியேதான் இருப்பர்” என விமர்சனம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சுதந்திரப் போராட்டத்தில் ஒருநாளும் ஈடுபடாத ஆர்எஸ்எஸ் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்தியாகம் செய்ததாக ஏதாவது ஒரு ஆர்எஸ்எஸ்காரராவது உள்ளாரா? என அவர் கேள்வி எழுப்பினார்.