ராகுலின் படத்தைத் தலைகீழாக பதிவிட்டு.. 'இப்போ சரியாக உள்ளது' என்ற ஸ்மிருதி இராணி

ராகுல் காந்தியின் புகைப்படத்தை தலைகீழாகப் பதிவிட்டு இப்போது சரியாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.
ராகுலின் படத்தைத் தலைகீழாக பதிவிட்டு.. 'இப்போ சரியாக உள்ளது' என்ற ஸ்மிருதி இராணி


மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திய ராகுல் காந்தியின் புகைப்படத்தை தலைகீழாகப் பதிவிட்டு இப்போது சரியாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி.

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓம்காரேஷ்வரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்ற ராகுல் காந்தி, அங்கு வழிபாடு நடத்தி, அன்னை நர்மதா தேவிக்கு ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

ஓம்காரேஷ்வரர் கோயில் குருக்கள், ராகுல் காந்திக்கு தலைப்பாகையும், ஓம் என்று எழுதப்பட்ட சால்வையையும் அணிவித்திருந்தார். இந்த சால்வை தலைகீழாக அணிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் புகைப்படத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது டிவிட்டர் பக்கத்தில் தலைகீழாகப் பதிவிட்டு, இப்போது சரியாக உள்ளது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் லாவண்யா பல்லால் இது பற்றி கூறுகையில், மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கை, ராகுல் காந்தி மீது இருக்கும் வெறுப்பு அபத்தமான உச்சத்தைக் கண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. ராகுலுடன், அவரது சகோதரியும் கட்சி பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவும் பங்கேற்றுள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் வழியாக மத்திய பிரதேசத்தை புதன்கிழமை எட்டியது. இன்று நான்காவது நாளாக நடைபெறும் நடைப்பயணத்தின்போது, பிரியங்கா, அவரது கணவா் ராபா்ட் வதேரா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

அவா்கள் சோ்ந்து நடந்து சென்றபோது, இருவரையும் வாழ்த்தி கட்சித் தொண்டா்கள் கோஷமிட்டனா்.  80-வது நாளாக நீடித்து வரும் ராகுலின் நடைப்பயணம், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானில் டிசம்பா் 4-இல் நுழையவுள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் தேர்தல்
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால், 2020 மாா்ச்சில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20 போ் அக்கட்சியிலிருந்து விலகியதால், கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது. அடுத்த ஆண்டில் இம்மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com