உத்தரகண்ட் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்களில் 10 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.

கங்கோத்ரி மலைத்தொடரின் திரவுபதிகா தண்டா மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 29 மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர்.

இவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மூலம் பனிச்சரிவில் சிக்கிய 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

எஞ்சிய 21 மலையேற்ற வீரர்களில் 10 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கங்கோத்ரி மலைத்தொடரில் உள்ள நேரு மலையேற்ற பயிற்சி நிறுவனம் மூலம் 7 பயிற்சியாளர்கள் உள்பட 41 பேர் பயிற்சிக்கு சென்றிருந்தனர்.

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.