செப்டம்பரில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டியது!

நாட்டில்  செப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
செப்டம்பரில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டியது!

நாட்டில்  செப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

யுபிஐ என்பது உடனடி நிகழ்நேர கட்டண முறையாகும், இது வங்கிகளுக்கு இடையேயான பியர்-டு-பியர் (பி2பி) பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. பரிவர்த்தனை எளிதான படிகளில் மொபைல் மூலம், கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரகிவர்த்தனை  செய்யப்படுகிறது. தவிர, யுபிஐ பரிவர்த்தனைக்கு இதுவரை எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. 
மேலும், நாடு கிட்டத்தட்ட பணமில்லா (ரொக்கமில்லா) பொருளாதாரமாக மாறுவதில் யுபிஐ முக்கிய பங்கு வகிக்கிறது.

2016 ஆம் ஆண்டு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அறிமுகம் செய்து வைத்தார். 

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி,  செப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11 லட்சம் கோடி பரிவர்த்தனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இந்த மாதத்தில் ரூ. 678 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மே மாதத்தில் யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனைகள் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

கடந்த மாதம் ரூ.10.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 657.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

என்பிசிஐ தரவுகளின்படி, ஜூன் 2022 இல், யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மதிப்பு மே மாதத்தில் ரூ.10,41,506 கோடியிலிருந்து ரூ.10,14,384 கோடியாக குறைந்துள்ளது. இது ஜூலையில் ரூ.10,62,747 கோடியாக அதிகரித்துள்ளது.

பண்டிகை மாதமான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டிலும் மற்றொரு சாதனையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் நன்மை குறித்து ஸ்பைஸ் மணியின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறுகையில், யுபிஐ முக்கிய நன்மை என்னவென்றால், மூன்றாம் தரப்பு கொடுப்பனவர்களின் சிரமத்தை யுபிஐ நீக்கியுள்ளது.

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனிப்பட்ட சுயவிவரங்கள் தேவையில்லாமல் யுபிஐ பயன்படுத்தி பல கணக்குகளுக்கு இடையில் பணப்பரிவர்த்தனைகள் செய்யலாம் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com