வெடி இல்லா தீபாவளி: பட்டாசு உற்பத்தி - விற்பனைக்குத் தடை

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஹரியாணா அரசு தடை விதித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஹரியாணா அரசு தடை விதித்துள்ளது. 

மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக ஹரியாணா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர்காலத்தையொட்டி ஏராளமான பண்டிகைகள் வருகின்றன. இதற்காக கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசுகளும் வெடிக்கப்படுகின்றன. இதனால் மாநிலத்தில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பட்டாசு உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில் பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும். 

பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் குறைவதோடு மட்டுமல்லாமல், இரும்புத் துகள்கள், நச்சுக்கள், பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள், நச்சு வாயுக்களையும் காற்றில் வெளியிடுகிறது. இதனால் பட்டாசு வெடிக்க ஹரியாணா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதிக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com