சிவப்பு நிற இதயத்தைப் பார்த்தால் வாகனத்தை நிறுத்தவும்.. பெங்களூரு சிக்னல்களில் அதிசயம்

பெங்களூரு நகரத்தின் பல முக்கியப் பகுதிகளில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களில், சிவப்பு நிற விளக்குகள் இதய வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

பெங்களூருவில் வாகன ஓட்டிகள் பலரும், சிவப்பு நிற விளக்குகள் இதய வடிவில் மாற்றப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், சிலர் ஏன் இப்படி இதய வடிவில் சிவப்பு நிற சிக்னல் மாற்றப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து கிடைத்த தகவல் என்னவென்றால், உலக இதய தினத்தை முன்னிட்டு, மணிப்பால் மருத்துவமனை, பெங்களூரு மாநகராட்சி மற்றும் பெங்களூரு போக்குவரத்துக் காவல்துறையுடன் இணைந்து இதுவரை 15 சிக்னல்களில் இருக்கும் சிவப்பு விளக்குகளை மாற்றிவிட்டு இதயவடிவிலான விளக்குகளை பொருத்தியுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் டிவிட்டர் பக்கத்திலும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. வெறும் சிவப்பு நிறத்தை இதய வடிவில் மாற்றியதோடு மட்டுமல்ல, சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில் இதய நலன் குறித்த தகவல்களையும், ஒலிப்பெருக்கி வாயிலாக பகிர்ந்து வருகிறது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com