அகல்விளக்கு வாங்கினால் லாட்டரி அடிக்கும்: இது தீபாவளிப் பரிசு

வெளிநாட்டுப் பொருள்களை வாங்காமல் உள்நாட்டில் தயாராகும் அகல் விளக்குகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அகல்விளக்கு வாங்கினால் லாட்டரி அடிக்கும்: இது தீபாவளிப் பரிசு
அகல்விளக்கு வாங்கினால் லாட்டரி அடிக்கும்: இது தீபாவளிப் பரிசு


கோடா: வெளிநாட்டுப் பொருள்களை வாங்காமல் உள்நாட்டில் தயாராகும் அகல் விளக்குகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான அகல் விளக்குகளை செய்யும் குயவர்களின் வாழ்விலும் ஒளியூட்டும் வகையில், 20க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை வாங்குவோருக்கு ஒரு சிறப்பு கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூப்பன்கள் குலக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குளிர்பதனப் பெட்டி, கடிகாரம், ஹெல்மெட் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

வெளிநாட்டு பொருள்களுடன் சரியான முறையில் உள்ளூர் பொருள்கள் போட்டியிட வேண்டும் என்பதற்காக இந்த குலுக்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராம நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து நிர்வாகமும் இதற்காக நிதி ஒதுக்கி, ஒற்றுமையாக இந்த குலுக்கல் பரிசுப் போட்டியை நடத்தவிருப்பதாகக் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com