கலால் கொள்கை முறைகேடு வழக்கு: விசாரணைக்கு ஆஜரானார் மனீஷ் சிசோடியா!

தில்லி கலால் வரிக் கொள்ளையில் நடந்த ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளார். 
கலால் கொள்கை முறைகேடு வழக்கு: விசாரணைக்கு ஆஜரானார் மனீஷ் சிசோடியா!

தில்லி கலால் வரிக் கொள்ளையில் நடந்த ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளார். 

இன்று காலையில் தனது கட்சி அலுவலகத்துக்கு வந்த சிசோடியா அங்கிருந்து ராஜ்காட் சென்றார். பின்னர். 11.15 மணியளவில் தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். 

விசாரணைக்கு முன்னதாக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் அவரது இல்லத்தின் வெளியே திரண்டுள்ளனர்.

கடந்தாண்டு நவம்பா் மாதம் தில்லி கலால் வரி கொள்கை செயல்படுத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் மனீஷ் சிசோடியா மற்றும் 14 போ் மீது இந்திய தண்டனைச் சட்டங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

மேலும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையும் (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது. இந்த எஃப்ஐஆரில், கலால் கொள்கை அமலாகத்தில் மதுபான வியாபாரிகளில் ஒருவரான சமீா் மகேந்திரு, சிசோடியாவின் ‘நெருங்கிய கூட்டாளி’களுக்கு கோடிகளில் பணம் செலுத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிசோடியாவின் ‘நெருங்கிய கூட்டாளிகள்’ அமித் அரோரா, தினேஷ் அரோரா மற்றும் அா்ஜுன் பாண்டே ஆகியோா் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ‘மதுபான உரிமதாரா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணப் பலன்களை நிா்வகித்தல் மற்றும் திசை திருப்புவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்’ எனவும் எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் ஒய்எஸ்ஆர்சிபி எம்பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டியின் மகன் ராகவா ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com