காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள் கிழமை மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. 
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள் கிழமை மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. 

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாவடிகளில் காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருந்து மொத்தம் 711 பேர் வாக்களிக்க வேண்டும். அதில் 659 வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மட்டும் 93 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பெட்டிகள் தில்லியில்  உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன. அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு, முடிவுகள் வரும் 19ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

ரகசிய வாக்குச்சீட்டு முறையில் காங்கிரஸ் தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சீட்டில் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரின் பெயரின் எதிரே ‘டிக்’ குறியீடு செய்து மத்திய தோ்தல் குழு அறிவுறுத்தலின் படி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகம் உள்பட நாடு முழுவதும் 65-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெறுவது இது 6-ஆவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com