
லடாக்கில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
இன்று காலை 8.07 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், யூனியன் பிரதேசத்தின் லே பெல்ட்டில் இருந்து வடகிழக்கே 135 கிமீ தொலைவில் இருந்தது.
நில அதிர்வால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிக்க: குஜராத்தில் பாதுகாப்புத்துறை கண்காட்சியைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!
இந்த நிலநடுக்கம் வடக்கே 34.92 டிகிரி அட்ச ரேகையிலும், கிழக்கே 78.72 டிகிரி தீர்க்க ரேகையிலும் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.